img
img

விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர் 
திங்கள் 04 மார்ச் 2019 17:45:49

img

கேப்டவுன், 

தென் ஆப்பிரிக்காவில் என்ஜினீயர் ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார். 

சம்பவத்தன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது. அப்போது விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அதில் அவர் விமானி இல்லை. அதற்கான லைசென்சும் அவர் பெறவில்லை என தெரியவந்தது. இவர் விமானி ஆவதற்கு முன்பு இவர் விமான என்ஜினீயராக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. 

எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாக அறிவித்துள்ளது. சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் விமானி லைசென்சை பெறுவது கட்டாயமாகும். இதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img