கொழும்பு,
இலங்கையில் தூக்கிலிடுபவர் பணிக்கு 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். இலங்கையில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இருந்தும் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணத் தண்டனை கைதியை தூக்கில் போடும் பணியில் ஈடுபடுபவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதில் இருந்து அப்பதவி காலியாக உள்ளது. எனவே, அதற்கு பணி நியமனம் செய்ய ஆட்கள் தேவை என இலங்கை நீதி, சிறை மறு சீரமைப்பு துறை விளம்பரம் செய்தது.
விண்ணப்பிக்க கடைசி தேதியாக கடந்த மாதம் (பிப்ரவரி) 25 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அப்பணிக்கு 100 பேர் விண்ணப்பித்துள்ள னர். அவர்களில் அமெரிக்கரும் ஒருவர். தற்போது தூக்கிலிடும் பணிக்கு ஊழியர் தேர்வு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 48 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்னும் 2 மாதங்களில் இவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் என அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்திருந்தார்.
ஏற்கெனவே இப்பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தவர் விலகி விட்டதால் நிரந்தர ஊழியரை நியமிக்க ஆள் தேர்வு நடை பெறுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்