இஸ்லாமாபாத்,
எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசினார். பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் இம்ரான்கான் குறுக்கிட்டார். அதற்காக அவர் மன்னிப்புக் கேட்ட வாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு அல்ல. எனவே இந்திய தலைமை பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். அதே நேரத்தில் பதற்றம் வேண்டாம் என்னும் பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனம் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நமது ஆயுதப்படைகள் கடுமையாக போரிடக்கூடியவை. எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பதில் அளிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிற நாடு ஆகும். இந்த பிராந்தியத்தில் அமைதி தவழ வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். இதுதான் பாகிஸ்தானின் விருப்பம். பதற்றம் பாகிஸ்தானின் நலன்களுக்கானது அல்ல, இந்தியாவின் நலன்களுக்கானதும் அல்ல. எனவேதான் இந்திய பிரதம ருடன் தொலைபேசியில் பேசுவதற்கு நான் முயற்சித்தேன். பிராந்தியத்தில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கு பதற்றத்தை தணிப்பதில் சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்