ரியோ டீ ஜெனிரோ,
பிரேசிலில் நின்றுகொண்டிருந்த ரயிலின் மீது மற்றொரு ரயில் மோதி கொண்ட விபத்தில் அதன் ஓட்டுநர் பலியானார். பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரின் வடக்கு பகுதியில் சாவோ கிறிஸ்டோவோ என்ற இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பயணிகள் ரயில் ஒன்று இந்த ரயில் நிலையத்துக்கு வந்தது.
ரயில் நின்றதும், பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த ரயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து மீட்புக் குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பயணிகள் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அதே சமயம் ரயில் இயந்திர இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை மீட்பதில் சிக்கல் எழுந்தது. 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்