img
img

ஜப்பானில் 1/4 எடையில் பிறந்த குழந்தை தேறியது 
சனி 02 மார்ச் 2019 15:41:29

img

தோக்கியோ,  

ஜப்பானில் 1/4 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் 5 மாதங்களில் 3 கிலோ உயர்ந்தது. ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கர்ப்பிணி ஒருவர், மருத்துவப் பரிசோதனைக்காக வந்தார். அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்தபோது, அவரது வயிற்றில் உள்ள கருக்குழந்தை போதிய வளர்ச்சியடையாமல் இருப்பது தெரிய வந்தது. 

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் மட்டுமே இருந்தது. அதாவது இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கும் வகையில் பெரிய வெங்காயத்தின் அளவில் அந்த குழந்தை இருந்தது.  இதன் மூலம் அந்த குழந்தை உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றது. 

இதையடுத்து, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன் பயனாக 5 மாதங்களில் அந்த குழந்தையின் எடை 3 கிலோ 200 கிராமாக உயர்ந்தது. தற்போது பிற குழந்தைகளைப் போலவே நலமாக இருக்கும் அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img