img
img

பதிலடி தருவோம் பாகிஸ்தான் கொக்கரிப்பு 
வியாழன் 28 பிப்ரவரி 2019 18:42:38

img

இஸ்லாமாபாத், 

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் தயாராக இருங்கள் என்று ராணுவத்தினரையும் பொதுமக்களையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்   கேட்டுக் கொண்டார்.தேசிய பாதுகாப்பு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டோக்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது உண்மையல்ல என்று வன்மையாக கண்டிக்கிறோம். பொறுப்பற்ற முறையில் இந்தியா மீண்டும் கற்பனை கதையை அவிழ்த்து விட்டு ள்ளது. இந்தியாவின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை உணராமல், பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

உலக பத்திரிகையாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிட்டால், என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வரும். இந்தியா தேவை யற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பதில் தாக்குதலுக்கான இடத்தை பாகிஸ்தான் தேர்வு செய்து வருகிறது. உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் பதி லடி கொடுக்கப்படும்  என்று கூறப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ராணுவம் நான்காவது நாளாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 8 நாட்களில் இதுவரை 7ஆவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இஸ்லாமாபாத்தில் வெளி யுறவுத் துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு பின் முகமது குரேஷி அளித்த பேட்டியில்,  எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்தியா எல்லை மீறிய விவகாரத்தை இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, நட்பு நாடுகள் ஆகியவற்றிடம் முறையிடுவோம். இது தவிர நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். நம் நாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்தியா நடத்திய தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img