டாக்கா,
வங்காளதேச விமான கடத்தல் முயற்சியின் பின்னணி குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா வில் இருந்து துபாய்க்கு 148 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், கையில் துப்பாக்கி யுடன் விமானிகள் அறைக்குள் சென்று தான் விமானத்தை கடத்துவதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து சிட்டிகிராம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அந்த பயணி தனது உடலில் வெடி குண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும், பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் விமானத்தை தகர்த்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோக்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் டாக்காவைச் சேர்ந்த முகமது அமீது (வயது 25) என்ற அந்த பயணி, தன் மனைவி உடனான பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் ஷேக் ஹசீ னாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக விமானத்தை கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்தி ருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும், வெடிகுண்டுகள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்