img
img

டிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு முன்னாள் பெண் ஊழியர் தொடுப்பு 
வியாழன் 28 பிப்ரவரி 2019 18:36:20

img

வாஷிங்டன், 

2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரச்சாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டி உள்ளார். 

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்புக்கு பெண்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதன் பின்னரும் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரச்சாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரச்சாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் தன்னுடைய மனுவில், 2016ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான டிரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன் என தெரி வித்துள்ளார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img