கெய்ரோ,
எகிப்தில் காசிம் பராகாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எகிப்து நாட்டின் மூத்த அரசு வழக்கறிஞராக இருந்து வந்தவர் காசிம் பராகாத். இவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிம் பராகாத் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்