வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானார்.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்தார். கடையில் மேலாளர் கோவர்தன் ரெட்டி (வயது 48) மட்டும் இருந்துள்ளார். அவரை மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இந்த தாக்குதலில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பணத்தையோ, விலை உயர்ந்த பொருட்களையோ திருடிச் செல்லவில்லை. எனவே, வேறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்