img
img

இடுகாட்டில் சட்டவிரோதமாக குடியிருந்த மியன்மார் நாட்டவர்கள் 6 பேர் கைது.
சனி 23 பிப்ரவரி 2019 13:11:10

img

(எம்.கே.வள்ளுவன்) சிங்கப்பூர்,

சுவா சூ காங் இடுகாட்டில் சட்ட விரோதமாக குடியிருந்த ஆறு மியன்மார் நாட்டவர்களை குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரிகள் கைது செய்தனர். அந்த அறுவரும் இடுகாட்டில் சட்ட விரோதமாக தங்கி வேலைப்பார்த்து வந்தனரென நம்பப்படுவதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்தது. இடுகாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை வழி 22 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட அந்த அறுவரும் பிடிபட்டதாக ஆணையம் தெரிவித்தது.

அந்த அறுவரும் அந்த இடுகாட்டில் புதைகுழி தோண்டும் பணியினை மேற்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது. குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளைக் கண்டதும் மியன்மார் ஆடவர் தப்பிக்க முயன்றுள்ளார். எனினும் அந்த ஆடவரை கைது செய்ததோடு அவரின் உதவியுடன் இடுகாட்டு குடியிருப்பில் இருந்த மேலும் ஐவர் பிடிபட்டதாக தெரிவித்த ஆணையம், பிளாஸ்டிக் நாற்காலிகள், காலியான மதுபான டின்கள் போன்றவை அங்கு காணப்பட்டதாகவும் தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் தங்கியிருப்போருக்கும் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழை வோருக்கும் கூடியபட்சம் 6 மாதச் சிறைத் தண்டனையும் 3 பிரம்படிகளும் கொடுக்க சட்டம் வழி செய்கிறது. அதே வேளை சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயல்பவர்களும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img