கலிபோர்னியா,
அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.
ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பல்வேறு சமூக குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்