img
img

பிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல் 
புதன் 20 பிப்ரவரி 2019 13:59:26

img

பிரெக்சிட் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் 7 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்சிட்) மார்ச் 29ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான பிரெக்ஸிட்  நடவடிக்கையை அனைத்து தரப்பினரின் ஆதரவுடன்  பிரெக்ஸிட் நட வடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த பிரிட்டன் நாடாளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார். 

இதற்கிடையே பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் நேற்று திடீரென கட்சியில் இருந்து வில கினர். பிரெக்சிட் விவகாரம், யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். முக்கிய எம்.பி.க்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img