ரியாத்,
சவூதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்நாட்டு அரசிற்கு மனித உரிமை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் எங்கு செல்கி றார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது.
இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆப் மூலம் சவூதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்க ளை உலவு பார்ப்பது போல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை சவூதி அரசு மறுத்துள்ளது.
‘தி அப்ஷர்’ என்ற இந்த ஆப் பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருக்கிறது என சவூதி அரசு கூறியுள்ளது. இந்த ஆப் அனைத்து செல்போன்களிலும் பயன்படுத்தக்கூடியது. இதன்மூலம் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை புதுப்பித்துக் கொள்ளவும் இயலும் என கூறியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆப் குறித்து தனக்கு தெரியாது எனவும் இது குறித்து பரிசீலிக்க உள்ளதாகவும் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்