இஸ்லாமாபாத்,
சவூதி அரேபிய சிறைகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவிட்டு ள்ளார். சவூதி அரேபிய சிறைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்றவழக்குகளில் விசாரணை கைதியாகவும் தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் இருநாள் அரசு முறை பயணமாக இஸ்லாமாபாத் வந்துள்ளார். அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சௌத்திடம் தெரிவித்தார்.
ஏழை தொழிலாளர்களாக சவூதிக்குச் சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வருமானம் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக இளவரசரிடம் இம்ரான் கான் சுட்டிக் காட்டினார். இதனையேற்ற முஹம்மது பின் சல்மான் அல் சௌத், சவூதி அரேபிய சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி பவாத் சௌத்ரி தெரிவித்தார்.
மீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவூதி அரசு பரிசீலித்து வருவதாகவும் பவாத் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்