இஸ்லாமாபாத்,
முதியவர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலிரவில் கணவரின் விலையுயர்ந்த பொருட்களுடன் அப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா (70). இவருக்கும் நஜ்மா பிபி (28) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. முஸ்தபாவுக்கு இது இரண்டாம் திருமணம் என்ற நிலையில், நஜ்மா பிபிக்கு ரொக்கப் பணமும் முதல் மனைவியின் நகைகளையும் அவர் கொடுத்தார்.
இந்நிலையில் முதலிரவில் நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்த நிலையில் அவர் மயங்கினார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா பிபி ஓட்டம் பிடித்ததை முஸ்தபா உணர்ந்தார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ள முஸ்தபா, நஜ்மா பிபி ஒரு கும்பலுடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார். இது குறித்து விசாரித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்