லண்டன்,
முதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக தாயின் கர்ப்பப்பையில் இருந்த கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.
இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரின் கர்பப்பையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு பிறந்தால் குழந்தை நடக்கும் திறனை இழப்பதோடு, குழந்தை வளர்ந்தப் பிறகு எண்ணற்ற அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்யலாம் என பீதன் சிம்சனுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த உலகின் தலை சிறந்த டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அவர்கள் பீதன் சிம்சனின் கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை நேர்த்தியாக வெளியே எடுத்து முதுகுத்தண்டை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து பீதன் சிம்சனின் கர்ப்பப்பையில் மீண்டும் பத்திரமாக வைத்து சாதனை படைத்தனர். பீதன் சிம்சனும், அவரின் கருக்குழந்தையும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்