கொழும்பு, பிப்.16-
மக்கள் விடுதலை முன்னணியினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை விமர்சிப்பதற்கு எவ்வித உரிமைகளும் கிடையாது என நாடாளு மன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது எதிர்க்கட்சி பதவியின் பொறுப்பு களை முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த நான்கு வருட காலமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணி யும் செயல்பட்டது.
இவ்விரு தரப்பினரும் முறையான எதிர்க்கட்சியினராக கடமையாற்றினார்களா? ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிகளாகவே தொடர்ந்து செயல்பட்டனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்