கொழும்பு,
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் 17 பேர் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரகசிய சந்திப்புகளை நடத்தி வருவதால், கட்சியின் மூத்த உறுப்பின ர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், எம்.பிக்களின் செயல்பா டானது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது.
எம்.பிக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், எதற்காக இவர்கள் ரகசிய சந்திப்புகளை நடத்த வேண்டும்; இதன் பின்புலம் என்ன; இவர்களை இயக்குவது யார் என்றெல்லாம் மூத்த உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கான காரணங்களை எம்.பிக்கள் வெளிப்படையாக அறிவிக்காத போதிலும், ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சி விவகாரங்களில் பங்காளிக்கட்சிகள் தலையிடக்கூடாது.தேசிய அரசாங்கம் அவசியமில்லை என்பன உட்பட மேலும் பல விஷயங்கள் தொடர்பில் ரகசிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்