img
img

பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி
சனி 09 பிப்ரவரி 2019 15:24:12

img

மாஸ்கோ,

ரகசியமாக பூமிக்கு வந்து சென்றது வேற்று கிரகவாசிகளின் விமானம்தான் என விஞ்ஞானிகள் 95 சதவிகிதம் உறுதியாக கூறியுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பூமிக்கு அருகில்  வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. 

இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருந்தது.  அதுமட்டுமின்றி அதில் இருந்து, சிறிய சிறிய சிக்னல்களும் வந்து கொண்டு இருந்ததால், வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் அதற்கு உடனடியாக ஒமுவா என்று பெயர் வைத்தார்கள். இதன் அர்த்தம்  வெளி உலகில் இருந்து வந்த தூதுவன் என்று அர்த்தம். 

இது என்ன என்பதை அறிவதற்காக ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார். ரஷ்யா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். அது பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்ததால், இது வேற்றுகிரக விமானமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. இப்படி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி கொண்டிருந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் ஹார்வேர்ட் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. 

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷுமேல் பெய்லி தலைமையில் நடத்த ஆராய்ச்சியில், இந்த சாதனம் கண்டிப்பாக 95 சதவிகிதம் வேற்றுகிரக விமானம்தான். இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும்.  ஆனால் இது ஏன் பூமியை நோக்கி வந்தது என்பதைத்தான் விரைவில் நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேற்றுகிரக விமானம் இங்கு ஏன் வர வேண்டும். ஏற்கெனவே வேற்றுகிரகவாசிகள் குறித்து பல செய்திகள் வரும் நிலையில், அந்த விமானம் பூமியில் இருக்கும் மக்களை நோட்டமிட வந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img