வாஷிங்டன்,
அமெரிக்காவில் மின் (எலக்ட்ரானிக்) சிகரெட் வெடித்து சிதறியதில் ஆடவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள மின் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு மின் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக மின் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மின் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மின் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2ஆவது மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது ஆடவர் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பி டத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்