வாஷிங்டன்,
அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஈராக், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து தங்கள் நாட்டு படைகளை 30 நாட்களுக்குள் திரும்பப்பெற உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல், குடியரசு கட்சியினர் மற்றும் நட்பு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் டிரம்ப் தனது முடிவை தாமதப்படுத்தினார்.
இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடம் பறிபோய்விட்டது. ஐ.எஸ். அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது. அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஈராக், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழு மையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்