கராக்கஸ்,
வெனிசுலாவின் அதிபர் தனது குடும்பத்தை மிரட்டுவதாக அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி யுள்ளார். வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்த வேளையில் நாடாளுமன்ற சபாநாயகரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜூவான் குவைடோ தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். அவருக்கு அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் ஜூவான் குவைடோவின் முடிவை ஏற்க மறுத்த நிகோலஸ் மதுரோ அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஜூவான் குவைடோ வெனிசூலாவை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அவரது சொத்துகளையும் முடக்கியது.
இந்த நிலையில், தன்னை பயமுறுத்துவதற்காக அதிபர் நிகோலஸ் மதுரோ தனது குடும்பத்தை மிரட்டுவதாக ஜூவான் குவைடோ குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில் பாதுகாப்பு படை வீரர்கள் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எனது மனை வியிடம் விசாரணை நடத்துவதாக கூறி அவருக்கு மிரட்டல் விடுத்தனர். நிகோலஸ் மதுரோ சர்வாதிகார ரீதியில் என்னையும் எனது குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார் என தெரிவித்தார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்