பெய்ரூட்,
சிரியாவில் 2 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரு கிறது. மற்றொருபுறம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுவிட்டனர். அத்து டன் இந்த போரில் ஏதும் அறியாத அப்பாவி சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் செத்து மடியும் சோக நிகழ்வும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் சிரியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் சிக்கியும் இடம் பெயரும் போது உணவு தண்ணீர் கிடைக்காமலும் கடந்த 2 நாட்களில் மட்டும் 11 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததாக குழந்தைகளுக்கான ஐ.நா.வின் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இப்படி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 32 குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்