ஹூஸ்டன்,
அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் தென்கிழக்கே லூசியானாவில் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட். 51 வயது நிறைந்த இந்த தம்பதியரின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21). டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை சுட்டது டகோட்டா என போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டனர். இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரி ழந்தனர். அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (வயது 20) என தெரிய வந்துள்ளது. இவர்க ளில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது.
இந்த கொலைகளை செய்து விட்டு டகோட்டா மிஸ்ஸிசிப்பி நகருக்கு தப்பி சென்று உள்ளான் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் டகோட்டாவை தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்