புடாபெஸ்ட்,
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு சப்ளை செய்து வருகிறது. ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஹோட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ரோ போக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது. வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது. ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரிய வர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.
இதனால் ஹோட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரோபோக்களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்த ஹோட்டல் நிர்வாகம் பணி புரியும் ரோபோக்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்