கொழும்பு,
அதிபர் தேர்தலுக்குத் தயாராகுமாறு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கோத்தாபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அதேவேளை கோத்தாபாய ராஜபக்சேவின் இந்தக் கருத்தை அதிபர் செயலக மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதிபர் சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சே ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனாவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு தர மறுத்தால், அந்தக் கட்சி யுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்கவும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்து நடை பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் கோத்தாபாயவை களமிறக்க முன்னாள் அதிபர் மகிந்த தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்