லிமா,
பெரு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வீசிய பனிப்புயலால் ஹோட்டலில் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழந்தனர். பெரு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமாக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நேற்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அப்போது, பனிப்புயலின் வேகத்தால் அருகில் இருந்த பாறைகள் மற்றும் மண்கட்டிகள் அந்த ஓட்டல் சுவற்றின் மீது பலமாக மோதின.இதனால் ஹோட்டலின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அபன்கே நகர மேயர் எவரிஸ்ட்டோ ரமோஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்