ஆல்ப்ஸ்,
ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளரும் விமானத்தில் இருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர். விமான பயிற்சியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்