இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்காண தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற ஆயுதப் போராட் டத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இன்று யுத்தக்குற்ற விசாரணை தொடர்பில் தமிழ் மக்களும், தமிழ் தரப்பினரும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர். இறுதி யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து, சில முக்கியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியா கியுள்ளது. பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ படையதிகாரி ஒருவர் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் பயணித்த நேரம் அது. அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 16 திகதி முதல் 18ஆம் திகதி வரையான மூன்று நாட்களும் போர் உக்கிரமடைந்த நிலையில், அப்பாவி தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இராணுவத்திடம், சரணடைய இருந்த போராளித் தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்திலேயே, பிரபாகர னின் மகன் பாலச்சந்திரனும் பிடிபட்டுள்ளார். அவரை தங்கள் இராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தேன். தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பை வைத்திருந்த தனக்கு பாலச்சந்திரனைப் பார்த்ததும் வியப்பு. மாபெரும் இயக்கத்தின் தலைவரின் மகனா இவர் என்று. உடனடியாக பிஸ்கட், தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். எனினும், பாலச்சந்திரனை கொலை செய்யப்போவதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இராணுவத்தலைமைக்கு செய்தி போய்ச்சேர, முக்கிய அதிகாரிகளும், அவர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கருணாவும் உடன் வந்திருந்தார். பாலச்சந்திரனை என்ன செய்வது என்று ஆலோசனைகள் நடந்தன. இந்த சந்தர்ப்பத்தில் கருணா இவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன். தனது அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்க்க கூடும். அதனை உங்களால் தாக்கு பிடிக்க முடியாது. எனவே, உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என அலோசனை வழங்கினார். இதனையடுத்து, இளம் பாலகனான பாலச்சந்திரன் சுட்டு கொல்லப்பட்டதாக குறித்த அதிகாரி தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்