லாகோஸ்,
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி 171 பேரைக் கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.
நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும் அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள் உலக சுகாதார அமைப்பு, நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும் எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்