ஜாகர்த்தா,
இங்கு தங்கேராங் பகுதியில் உள்ள சுரூக் என்ற இடத்தில் பொது மினி வேன் ஓட்டுநர் ஒருவர் இறந்து கிடந்தார். அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று அப்பகுதி போலீஸ் துறை கூறியுள்ளது. மரணமடைந்த எடி (வயது 53) என்ற அந்த மினி வேன் ஓட்டுநர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டுள்ளார் என்று தென் தங்கேராங் போலீஸ் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் அலெக்ஸாண்டர் யுரிகோ கூறினார்.
இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த எடி, அதிகமான டுரியான் பழங்களை உட்கொண்டதால், அவருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டு, அவரின் இரத்த நாளங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வெளியாகி இறந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். மரணமடைந்த எடியின் உடலை அவரின் நண்பர்கள், அவரது மினி வேனில் கண்டுபிடித்தனர். விசாரணையின் மூலம் அவரின் மரணப் பின்னணியில் எத்தகைய சந்தேகமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டிருந்தார் என்ற விவரத்தை, அவரின் குடும்பத்தார், நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.
எடியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த அவரின் குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று இந்தோனேசிய பல்கலைக்கழகத்தின் ஊட்டச் சத்து நிபுணர் மர்யா ஹர்யோனோ கூறினார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்