தைப்பே,
பிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார். தைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (வயது 36). இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார். பின்னர் உச்சிக்குச் சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார்.
இந்த புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவார். இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது. கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடந்த 4 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன்.
என்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன. அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார். நீங்கள் மலை உச்சிக்குச் சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள் என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது. அதனை ஏன் விரும்பக்கூடாது எனக் கூறினார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ளார். அப்போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அவரை தொடர்ந்து தேடிய போது அவர் இறந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்