வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வாய்னே கவுண்டியில் மிகப் பழமையான சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. கிளப்லேண்டில் இருந்து 60 கி.மீ. தெற்கில் விமானம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.
மரங்களிலும் மின்கம்பங்களிலும் மோதி, பின்னர் ஒரு வீட்டின் முன்னால் அது விழுந்து நொறுங்கியது. நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆப்பிள் கிரீக் பகுதியைச் சேர்ந்தவர்கள். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானம் விழுந்தபோது அருகில் இருந்த வீடு கடுமையாக குலுங்கி உள்ளது. ஆனால், வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்