கொழும்பு, ஜன. 16- இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சே சகோதரர்களிடையே கடும் போட்டி வெடித்துள்ளது.அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கத் தானும் தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சேயின் சகோதரருமான சமல் ராஜ பக்சே தெரிவித்துள்ளார்.
ராஜபகக்சே சகோதர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதே வேளை மக்கள் தயார் என்றால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ராஜபக்சே சகோதரர்களில் இளையவரான கோத்தாபய ராஜபக்சே கூறியுள்ளார்.
ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பொது ஜன முன்னணியில் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது எனவும் சில நாட்களுக்கு முன்னதாக சமல் ராஜபக்சே கூறியிருந்தார்.சமல் ராஜபக்சேயின் இந்தக் கருத்து ராஜபக்சே குடும்பத்துக்குள்ளேயே அதிபர் பதவிக்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்