சிட்னி, ஜன.
வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த வைரம் பதித்த லிப் ஆர்ட் செய்து வைர நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசன் டோரோப் டைமண்ட் நிறுவனம், தங்களது 50ஆவது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் 50ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மேக்அப் ஆர்டிஸ்ட் கிளார் மாக் உதடுகளில் வைரங்களை பதித்து அசத்தியுள்ளார்.
ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும். மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகள் தான் வைரத்தில் வடிவமைக்கப்பட்டன. முதலில் உதட்டில் கருப்பு நிற மாட் லிப்ஸ்டிக்கைப் அப்ளை செய்துள்ளார்.
பின் பால்ஸ் ஐலாஷ் ஒட்டக்கூடிய பிசினை பயன்படுத்தி வைரங்களை உதடுகளில் ஒட்டியுள்ளார். இந்த லிப் ஆர்ட் முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆகியதாம். அவ்வாறு செயல்பட்டதனால்தான் விலை மதிப்பில்லாத இந்த சாதனை கிடைத்துள்ளது
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்