img
img

அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 
வெள்ளி 11 ஜனவரி 2019 15:02:50

img

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். 

அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 18 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. 

இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவுக்குள் வெளி நாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.மேலும் அவர் கூறும் போது சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் நடந்த கொலைகளை பட்டியலிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன். 

அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார். தென் மேற்கு எல்லை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வாரா என்பது குறித்த தகவல் முழுமையாக வெளியாக வில்லை. 

அதேநேரத்தில் எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img