கொழும்பு,
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ளனர். தற்போது அதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.
அதன் அடிப்படையில் புதிய அமைச்சரவையில் 3 முக்கிய இலாகாக்களை தன்வசம் வைத்துள்ளார். தற்போது ராஜபக்சே கட்சியுடன் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாகி இருப்பதால் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியாகி விட்டது. எனவே ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக்கி இருப்பதாக சிறிசேனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றம் கூடியது. அதில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்