பாஸ்டன், ஜன.,
நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது மிகச்சிறிய கிரக மாகும். அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டுபிடிக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது குளிர்ச்சியான கிரகம். பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளன.
எனவே உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது. இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது. எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூ செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துள்ளார். டி.இ.எஸ்.எஸ். விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்