லண்டன்,
உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தால் 12 மாதத்திற்குள் மனித இனத்தையே அவற்றால் தின்று தீர்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.தற்போது வரை பெரும்பாலான சிலந்திகள், பூச்சிகளையே உணவாக உட்கொள்கி ன்றன. ஆனால் சில காட்டு வகை சிலந்திகள், பல்லிகள், பறவைகள், சிறு வகை பாலூட்டிகளையும் உணவாக கொள்கின்றன.
ஆனால் சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில், உலகிலுள்ள மொத்த சிலந்தி வகைகள் உண்ணும் உணவின் மொத்த எடையானது மொத்த மனித இனத்தின் எடையை விடவும் அதிகம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் உள்ள மொத்த சிலந்தி வகைகளும் ஆண்டுக்கு சுமார் 440.9 இல் இருந்து 881.8 மில்லியன் டன் உணவு உட்கொள்கின்றன.
அதாவது உலகில் உள்ள மொத்த இளைஞர்களின் உடல் எடையே 316.3 மில்லியன் டன் எனக் கூறப்படும் நிலையில் சிலந்திகள் ஓராண்டில் எடுத்துக் கொள்ளும் உணவின் எடை அதை விட அதிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மொத்த மனித இனத்தையே ஓராண்டில் தின்று முடித்தாலும் உணவின்றி பல எண்ணிக்கையிலான சிலந்திகள் மிஞ்சும் என ஆய்வாளர்கள் பீதியை கிளப்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்