img
img

தாய்லாந்து பாபுக் புயல் தாக்குதல் 34 ஆயிரம் பேர் வெளியேற்றம் 
திங்கள் 07 ஜனவரி 2019 13:10:55

img

பேங்காக், 

பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 34 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டு உள்ளனர். தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு பாபுக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.  இந்நிலையில், பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தின் பட்டானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர். 

இதேபோல் தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பட்டானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img