கொழும்பு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் தமிழர்கள் தமக்கான ஆதரவை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றே நாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
நாம்தான் மீள்குடியேற்றத்தை அதிகமாக மேற்கொண்டுள்ளோம். 6 மாதங்களில் வெடி குண்டுகளை அகற்றி மக்களை குடியேற்றி மின்சாரம், சாலை, குளங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினோம்.எனினும் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் கூடிய விரைவில் அதனை நிறைவு செய்யத் திட்டம் கொண்டுள்ளோம். ஆகையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டால் கூட, தமிழர்கள் தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என உறுதியாக நம்புவதாக பசில் தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்