கொழும்பு,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சேவை ஏற்றுக் கொண்ட தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரியா இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான மகிந்த ராஜபக்சேவின் நிலை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே நாடாளுமன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து யாரேனும் விரும்பினால் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். அப்போது இந்த விவகாரத்தை சபாநாயகர் தீர்க்க முடியும் என்றும், அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும் மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் சுட்டிக் காட்டினர்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சி ஒன்றுக்கு தாவிய மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது. இது தொடர்பாக தேர்வுக் குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் மனோ கணேசனும் ஹக்கீமும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்