கொழும்பு,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தங்களின் பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-மாற்றுக் குழு என்ற பெயரில் செயல்படத் திட்டமிட்டுள்ள இந்த அணியினர், தங்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பொது நூலகத்தில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ள இந்தக் குழுவினர் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளது.
கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களின் தொகுதிகளில் கட்சி செயல்பா ட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு ள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்