img
img

பைக்கில சிங்கிள்ஸ் பார்த்திருப்பிங்க...ஃபிளைட்ல பார்த்திருக்கிங்களா?
வெள்ளி 04 ஜனவரி 2019 15:48:31

img

விமானத்தில் தனியாக செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் தனிவிமானம் இருக்க வேண்டும் அல்லது அனைத்து டிக்கெட்டையும் வாங்கும் அளவுக்கு வசதி இருக்க வேண்டும். இது எதுவும் இல்லை நானே சாதாரான டிக்கெட்டை எடுத்துவிட்டுதான் விமானத்தில் செல்கிறேன் என்றால், நம்மை தவிர வேறு யாரும் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மேலே சொன்னவற்றில் கடைசியாக குறிப்பிட்டுள்ள விஷயம்தான் நடந்திருக்கிறது. விமானத்தில் சாதாரான எக்கனாமி கிளாஸ் டிக்கெட்டை வாங்கிவிட்டு, யாரும் இல்லாத விமானத்தில் ஒருவராக பயணித்திருக்கிறார் லூயிஸ் என்ற பெண். 

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பிளிப்பைன்ஸ் நாட்டில் லூயிஸ் எரிப்ஸ் என்ற பெண் டாவோவில் இருந்து மனாலி என்னும் ஊருக்கு செல்ல பிளிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக் செய்திருக்கிறார். விமான நிலையத்திற்கு வந்து விமானம் ஏறி உள்ளே அமர செல்லும் வரை அவருக்கு அது ஒரு சாதாரான விமான பயணமாக இருக்கும் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், விமானத்திற்கு உள்ளே சென்று சென்று அமர்ந்தபோதுதான் தெரிந்திருக்கிறது தான் ஒருவர் மட்டும்தான் இந்த விமானத்திலேயே பயணம் செய்கிறோம் என்று. முதலில் விமானத்தில் இருக்கும் அனைத்து சீட்டுகளும் காலியாக இருந்ததால் பயந்திருக்கிறார். பின்னர் விமானம் மேலே சென்றபோது பயமும் பறந்துவிட்டது.

அந்த விமானத்தில் லூயிஸை தவிர, விமான வேலை பார்பவர்கள் மட்டுமே அவருடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் அனைத்து பயணிகள் இருக்கும்போத் கொடுக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற சொல்லி மைக்கில் பேசியுள்ளனர். அவருக்கு உணவு, டிரிங்ஸ் அனைவருக்கும் தருவதுபோன்று தந்து, அவருடைய பயணத்தை மேலும் சிறப்பித்துள்ளனர். 

விமானத்தில் ஒருவர் மட்டுமே இருப்பதை மொபைலில் புகைப்படம் எடுத்து, பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார். விமான கேபினில் இருந்த விமான பையலட், பணிப்பெண்கள் ஆகியோர் லூயிசுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். விமானத்தில் இதுபோன்று தனி ஆளாக பயணம் செய்வது இது புதிதல்ல, பலருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img