img
img

பிரேசில் அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார் 
வியாழன் 03 ஜனவரி 2019 12:51:43

img

பிரேசிலியா, 

பிரேசில் நாட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்த விழாவில், புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார். பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் ராணுவ கேப்டனும்  சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா (வயது 63), இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.  

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் ஜேர் போல்சோனாரா தீவிர பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது அவரை ஒருவர் கத்தியால் குத்தினார். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  இந்த தாக்குதலுக்குப் பிறகு ஜேர் போல்சோனாராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜேர் போல்சோனாரா.  

இதையடுத்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றார்.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img