பாரிஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் 1,700க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் எரிபொருள் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் துவங்கியதையடுத்து நேற்று முதல் அப்போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியது. கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர் பாரிஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களை சேதப்படுத்தினர்.
அங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபு ரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.இந்த மோதல் தொடர்பாக 1450 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ் புறநகரில், பாரிசுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதை கட்டுப்படுத்த 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்க ப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1450 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்