அமானுஷ்யங்களும் மர்மங்களும் கேட்பதற்கும்,வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அந்த இடத்தில் நாம் ஒருநாள் போய் மாட்டிகொண்டால்தான் புரியும் கொடுமைகளின் உச்சம். யார் அறிவார் சில நேரங்களில் நன்மைபயக்கும் விதத்திலும் சில அமானுஷ்ய பயணங்கள் அமையலாம். உலகின் நிறைய மர்மமுடிச்சுக்கள் அவிழ்க்கபடாமலேயே காணப்படுகின்றன.அவ்வாறான ஒரு பதிவு தான் இதுவும்,உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் கென்யாவில் காணப்படும் "துர்கானா ஏரி" ஆகும்.சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரசியம் இங்கு காணப்பட்டாலும் தீராத மர்மம் ஒன்று காணப்படுகின்றமை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. துர்கானா ஏரியை சுற்றி சிறு சிறு தீவுகள் நிறைய காணப்படுகின்றன.அவற்றில் ஒன்று தான் "என்வைட்டினெட்"இதன் பொருள் "திரும்ப வராது" என்பதாகும்.பெயருக்கு ஏற்றால் போல் இங்கு செல்லும் மனிதர்கள் யாருமே திரும்பிவரமாடார்கள்.ஆரம்பத்தில் இங்கு மனிதர்கள் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது போன்ற தொழில்களை அடிபடையாக வாழ்ந்துதான் வந்துள்ளனர்.மேலும் அவர்கள் தங்களது வர்த்தகத்திற்காக அண்மைய தீவுகளுக்கு சென்ற வண்ணம்தான் இருந்துள்ளனர்.ஆனால் காலப்போக்கில் வெளியே செல்லும் மக்களின் தொகை குறைவடையதுவங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் யாருமே வராது போன காரணத்தினால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போக மர்ம தீவாக மாறியது “என்வைட்டினெட்” .கடந்த 1935ம் ஆண்டு விஞ்ஞானி “விவியன் பஸ்”என்பவரின் பணிப்பின் பெயரில்“மார்டின் ஷெப்லிஸ் மற்றும் பில் டேசன்”ஆகியோர் குறித்த தீவினை பற்றி ஆய்வு செய்ய அங்கு பயனித்துள்ளனர்.ஆனால் அவர்களும் திரும்பவில்லை இந்த அதிர்ச்சியின் பின் ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர்.குறித்த தீவினை “ஹெலிகாப்டரில்” பறந்தபடி ஆய்வு செய்தும் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்களும் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் அறவே அற்று போய் காணப்பட்டது.இதை தொடர்ந்து அண்மைய தீவுகளில் வசிப்பவர்களிடம் தகவல்களை சேகரித்த போது. “அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்” என கூறப்பட்டது. பிரமாண்ட ஒளி எப்படி வருகின்றது? அது மனிதர்களை எரித்து விடுகின்றதா?அப்படி என்றால் மனித எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டும் அவைகள் எங்கே என்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் கிடைக்கபெறவில்லை.இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ள நிலையில் இங்கு காணப்படும் மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் பல வரான கருத்துக்கள் வலம் வந்தவண்ணம் தான் உள்ளது. ஆனால் உண்மை ஒருபோதும் வெகுசீக்கிரமாக வெளிவராது என்பதில் ஐயமில்லை
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்