img
img

காதலித்த கனடா பெண்ணை திருமணம் செய்து கொண்ட  ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி
வியாழன் 29 நவம்பர் 2018 12:57:56

img

ஹாங்காங், 

சுயபாலின காதலால் 31 வயது கனடா நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி(19) ஹாங்காங் நகருக்கு திரும்பியுள்ளார். அதிரடி ஆக்ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999ஆம் ஆண்டு வாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது. 

ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த அன்டி ஆட்டம் என்ற 31 வயது பெண்ணின் மீது காதல் வசப்பட்டார். ஓராண்டாக கனிந்து வந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 

கனடா நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக நவம்பர் 8ஆம் தேதி அந்நாட்டு அரசு இவர்களுக்கு திருமணச் சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதியர் ஹாங்காங் நகருக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக, பிரபல தற்காப்பு கலை வல்லுனரான எட்டா என்ஜி, தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கு சென்றாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு கிடைப்பதில்லை. நாங்கள் தற்போது ஹாங்காங் நகருக்கு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜாக்கி சானின் ஆதரவு இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துவந்த எட்டா என்ஜி, கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியேறினார். வசிக்க இடமின்றி தனது கனடா காதலியுடன் ஹாங்காங் நகரில் மேம்பாலத்துக்கு அடியில் தங்கி இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பி டத்தக்கது. 

 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img