வாஷிங்டன்,
இந்திய மக்களுக்கு அமெ ரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித் துள்ளார். நாட்டின் நிதி தலை நகரமான மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பயங்கரவாதி கள் அரங்கேற்றிய அதிபயங்கர தாக்குதலை நினைத்தால் இன்றும் அனை வரின் இருதயமும் பதறும். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.
மும்பை சி.எஸ்.எம்.டி. ரயில்நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால் குருவிகளைபோல சுட்டுத்தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர்.
308 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறை வடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனு சரிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து, டுவிட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம். வெற்றிக்கு அருகே கூட வரவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்